நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பிடாகை ஊராட்சியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் எந்தவித அனுமதியும் இல்லாமல் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், திடீர்னு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என நாகராஜன் புகார் மனு அளித்துள்ளார்.