6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

85பார்த்தது
கடந்த 2016 முதல் 2020 வரை அதிமுக ஆட்சி காலத்தில் ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் இல்லாத போது தனி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மேற்பார்வையில் ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் பிரதம்மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் குடிசை வீட்டில் வசித்தவர்களை பயனாளிகளாக தேர்வு செய்து கான்கீரிட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அப்போதிருந்த மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறைசார்ந்த விசாரணைகள் நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் கீழ்வேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூர், கோவில்கண்ணாப்பூர், தெற்குபனையூர், வலிவலம் ஊராட்சிகளில் சுமார் 146 வீடுகள் முறைக்கேடு நடந்ததாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் ஆதமங்கலம் ஊராட்சியில் கட்டப்பட்ட 49 வீடுகளை மயிலாடுதுறை பொதுப்பணித்திறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் அருள்பிரியா உள்ளிட்ட அதிகாரின் ஆய்வில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆய்வில் பட்டியலில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் பெயரில் வீடுகள் கட்டப்பட்டுள்ளாதா என ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி