கேரளா: கோழிக்கோடு நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு செவிலியர் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படிக்கும் லட்சுமி ராதாகிருஷ்ணன் (21) என்ற மாணவி, விடுதி அறையின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ளும் முன் லட்சுமி எழுதியுள்ள கடிதத்தில், தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் லட்சுமியின் இறப்பில் மர்மம் உள்ளதாக சந்தேகம் எழுப்பியுள்ளனர்.