சென்னை, அம்பத்தூர் மேனாம்பேடு சாலையில் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த நித்திவேல், லோகேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கண்மூடித்தனமாக வெட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். குற்ற வழக்கில் சிறை சென்று வெளியே வந்த தனக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மீண்டும் சிறைக்கே செல்லலாம் என்ற முடிவுடன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பட்டா கத்தியால் வெட்டிய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.