வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை மூலம் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்கிறது. இதே வரிசையில் வக்பு வாரிய திருத்தச்சட்டம் இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது. இதனை அனைவரும் எதிர்க்க வேண்டும். வக்பு வாரிய சட்டத்திருத்தத்தால் இஸ்லாமியர்கள் அச்சப்படுகின்றனர்” என்றார்.