சேலம் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய மூன்று இடங்களில் சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனைகள் நிறைவடைந்தன. நாமக்கல், கரூர் சிபிசிஐடி போலீசார் இணைந்து கரூரில் உள்ள கட்டுமான நிறுவனம், சேலம் சாலையில் உள்ள ஜி.ஆர்.எம் மற்றும் பொன் நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.