நாடாளுமன்றத்தில் மோடி மீண்டும் உரை

85பார்த்தது
நாடாளுமன்றத்தில் மோடி மீண்டும் உரை
பிப்.9ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைய இருந்த நிலையில் இன்று ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய கூட்டத்தொடர் ராமர் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ராமர் கோயில் தொடர்பான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது. தீர்மானத்தின் மீது இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி