தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தி.நகரில் நடைபெறும் தளபதி 69 திரைப்படத்தின் சூட்டிங்கில் விஜய் பங்கேற்க உள்ளதால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.