பெரியாருக்கு எதிரான அவதூறுகள் சாதி ஒழிப்புக் கருத்தியல் மீதான வெறுப்பு அரசியலின் ஃபாசிசத் தாக்குதல் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், பெரியார் மீதான நன்மதிப்பை நொறுக்கிட வேண்டுமென்கிற கிரிமினல் உத்தியைக் கையாண்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை எதிர்வரும் 2026 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வீழ்த்திட வேண்டும் என்கிற வெறியுடன் செயல்படுகின்றனர். பெரியார் முற்போக்கான அரசியலை நிலைப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.