இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

64பார்த்தது
இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு
இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் இருந்து இன்று (ஜூலை 26) திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏர் கண்டிசனர் வேலை செய்யாததால் பயணிகள் வியர்த்து விறுவிறுத்துப் போனதாகவும் மோசமான தரை இறக்கத்தால் பயணிகள் அச்சத்துடன் இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பயணம் ஒரு மோசமான அனுபவமாக இருந்ததாகவும் பயணிகள் தங்களது உயிரை கையில் பிடித்தபடி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி