ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், “காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. இந்த கொடூரமான செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தேசம் நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.