நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசே அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும். மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கழிவுகளை கொட்டிய கேரள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு துறைக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது.