கடலூரை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில், வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த கணவர் சொந்த ஊருக்கு திரும்பினார். அவர் மூத்த மகளை அவ்வப்போது மிரட்டி பலாத்காரம் செய்ததோடு இளைய மகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையடுத்து மகள்கள் போலீஸ் புகார் கொடுத்த நிலையில் 2021-ல் கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். நேற்று (டிச. 18) இவ்வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.