சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும்போது மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு தீர்மானங்களில் வேலை நடைபெறாமலேயே, நிதி பயன்படுத்தப்படுவதாக திமுக மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.