பாஜக எம்பிக்கள் தள்ளிவிட்டதால், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். மேலும் அவர், "தள்ளுமுள்ளின் போது சமநிலையை இழந்து தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். மிகுந்த சிரமத்துடனும், சக எம்பிக்களின் உதவியுடன் எனது இல்லத்திற்கு திரும்பினேன். இது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.