வங்கிகளில் பெற்ற கடன் தொகையை விட, கிங் ஃபிஷர் நிறுவன சொத்துக்களை விற்று 2 மடங்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். பொருளாதார குற்றவாளி என அழைக்கப்படும் தனக்கு இனியாவது நிவாரணம் கிடைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கிங் ஃபிஷர் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.6,203 மற்றும் அதன் சொத்துக்களை விற்று ரூ.14,131 கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.