நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனி தட்டில் என்பவருக்கும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு 'பேபி ஜான்’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் புரோமோஷனில் கீர்த்தி சுரேஷ் நேற்று (டிச. 18) கலந்து கொண்டார். இதில் மிகவும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்த அவர் தனது தாலி வெளியில் தெரியும்படி பார்த்துக் கொண்டார். இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.