சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் வங்கியில், தினேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று (டிச.19) வாடிக்கையாளர் போல் வங்கி உள்ளே சென்ற நபர், பணியில் இருந்த தினேஷை அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து, அங்கிருந்து தப்ப முயன்ற அவரை, ஊழியர்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதலில் தினேஷின் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.