மலையாள திரைப்படம் மற்றும் சீரியல் நடிகை மீனா கணேஷ் (81) காலமானார். இவர் பிரபல நடிகர் மறைந்த ஏஎன் கணேஷின் மனைவியாவார். வளையம், நக்கசத்தால், தலையணமந்திரம், வெங்கலம், நந்தனம் என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலக்காட்டின் ஷோர்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.