சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான "மதகஜராஜா" திரைப்படம் ஒரு தசாப்தத்துக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் வரும் பொங்கலுக்கு (ஜனவரி 12) ரிலீஸ் என படக்குழு அறிவிப்பால் சினிமா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது குறிப்பிடத்தக்கது.