ஆணவக்கொலை.. 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

62136பார்த்தது
ஆணவக்கொலை.. 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர். கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன் கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி