தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. உசிலம்பட்டியில் புதிதாக பள்ளிக்கு வந்த மழலைகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். ,
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. , மாணவ மாணவிகளும் உற்சாகமாக பள்ளிக்கு வந்துள்ள சூழலில், மதுரை உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இன்று பள்ளி திறக்கப்படதும் பள்ளிக்கு வருகை தந்தனர். , பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் மதன் பிரபு தலைமையிலான ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் முன் நின்று மாணவ மாணவிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.