மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ். போத்தம்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி திருக்கோவிலில் புரணமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணிகளை இன்று (ஜன. 12) உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு செய்தார். கோவிலின் உள்கட்டமைப்பு, சங்கிலி கருப்பசாமி சிலை, அர்த்த மண்டபம் உள்ளிட்டவற்றின் வேலைப்பாடுகளை கண்டு வியந்த எம்எல்ஏ அய்யப்பன், இந்த கட்டமைப்புகளை காணும்போது தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பக்கலைகள் போன்று உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் கோவிலின் பாதை மற்றும் தரைதள பகுதிகளில் பேவர் ப்ளாக், கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள உறுதுணையாக இருந்து பேவர் ப்ளாக் மற்றும் கழிப்பறை வசதிகளை செய்துகொடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து சீலக்காரியம்மனை எம்எல்ஏ சாமி தரிசனம் செய்தார்.