விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள்.

78பார்த்தது
விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. உசிலம்பட்டி சந்தை பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில், வேளாண் இடு
பொருட்களான குதிரைவாலி, கம்பு கோ. 10. சோளம் கோ. 32, பருத்தி கோ. 17, பருத்தி எஸ். பி. ஆர் 6, நெல்கோ. 51. பாரம்பரிய நெல், துவரை ஜிப்பம் பண்ணை கருவிகள், நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள் அனைத்தும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் பசுமை போர்வை
விவசாயிகளுக்கு அழைப்பு திட்டத்தில் தேக்கு, சந்தனம் வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கபட்டு வருகிறது.

வேம்பு தரிசு நலத்தில் நடவு செய்ய ரூ. 17, 000 மானியமும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உதவி வேளான் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று செல்லம்பட்டி
வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதைகள், வெள்ளை சோளம், குதிரை வாலி உள்ளிட்டவை இருப்பு உள்ளது. விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு அவற்றை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி