குழந்தையுடன் மனைவி மாயம் என கணவர் புகார்.

51பார்த்தது
குழந்தையுடன் மனைவி மாயம் என கணவர் புகார்.
மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே குழந்தையுடன் மனைவி மாயமானதாக கணவர் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சேடபட்டி காமராசர் காலனி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி என்பவர் தனலெட்சுமியை ( 24) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் குடும்ப விவகாரம் தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

தனலெட்சுமி குழந்தையுடன் வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அலெக்ஸ்பாண்டி டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :