"தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது"

54பார்த்தது
"தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது"
தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது. தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you