மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இளம்பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் வி எம் தெருவில் வசிக்கும் பாஸ்கரன் என்பவரின் 17 வயது மகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தாய் இறந்த காரணத்தால் இவரும் இவருடைய அண்ணன் புவனேஸ்வரனும் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்கள்.
இவர் மதுரையில் TELC பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டின் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் இவரது பாட்டி இவரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் இவர் 25ஆம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று சகோதரர் புவனேஸ்வரன் உசிலம்பட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள்.