மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரி முதுகலை மருத்துவர் மௌனிகா டப் னத் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கருப்பு பாட்ஜ் அணிந்து ஆர்பாட்டம் நடத்தினார்கள்.
மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சார்பில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர் ஜி கர் மருத்துவமனையில் முதுகலை மருத்துவர் மௌனிகா டக்னத் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்டதை கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்புகளை பதிவு செய்து மருத்துவர்கள் அடையாள வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று (ஆக. 17)நடைபெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை டீன் ரத்தினவேலு,
டீன் திருநாவுக்கரசு மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பெண் மருத்துவர்கள் பாதுகாப்பு வேண்டும் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.