சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் சதீஷ்குமார் என்பவர் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி, புகைப்படத்தை பெற்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆபாசமாக படத்தை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பல பெண் மருத்துவர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.