மதுரை திருப்பரங்குன்ற த்தில் 10ஆம் வகுப்பு மாணவியை தன் ஆசைக்கு இணங்க வற்புறுத்திய சாமியாரை கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் நடுத்தெரு தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (63) என்பவர் போல் சாமியார் உடையணிந்து அப்பகுதியில் திரிந்து கொண்டிருப்பார். எனவே அவரை அப்பகுதி மக்கள் சாமியென்று அழைத்து வந்தனர். சிறுவர்கள் சிறுமிகள் அவரை சாமியார் தாத்தா என்று அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் அவர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தன் ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தன் பெற்றோரிடம் தெரி வித்துள்ளார்.
இதனால் திருப்பரங் குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியார் மனோஜ்குமாரை கைது செய்தனர்.