மதுரை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் 2024-25ஆம் ஆண்டு நிதியாண்டில் பழச்செடி தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
பொது மக்களிடம் அன்றாட உணவு முறையில் பழங்கள் உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனை கருத்தில் கொண்டு, மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு தோட்டக்கலை துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் ரூ. 13. 725 இலட்சம் நிதி ஒதுக்கிட்டில் 30500 ஊட்டச்சத்து தொகுப்புகளும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 25. 68 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 17120 பழச்செடி தொகுப்புகளும் வழங்கப்பட உள்ளன.
வாழைக்கன்று, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை, போன்ற செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்பானது ரூ. 45/- க்கும், சப்போட்டா, கொய்யா, பப்பாளி, நெல்லி மற்றும் சிதா போன்ற 5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பானது ரூ. 150/- க்கும் 75% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். விருப்பமுள்ள பயனாளிகள் உழவன் கைப்பேசி செயலியிலோ அல்லது சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.