திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்.

61பார்த்தது
மதுரையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தோம் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளான அவனியாபுரம் பெருங்குடி , சிந்தாமணி சோழவந்தான் வாடிப்பட்டி பிற மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாவாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் பக்தர்கள் காவடி சுமந்தும் பால்குடங்கள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்

தொடர்ந்து இன்று மாலை 6. 30 மணியளவில் முருகன் மற்றும் தெய்வானைக்கு பால், பன்னீர், மஞ்சள் தேன் உள்ளிட்ட ஏழு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இதன் பின்னர் முருகன் மற்றும் தெய்வானை  பக்தர்களுக்கு அருள்பாலித்து தங்கமயில் வாகனத்தில் முருகன் மற்றும் தெய்வானை திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் உலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தொடர்புடைய செய்தி