திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்.

61பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் 50 க்கும் மேற்பட்ட பறவை காவடிகளும் வந்தன.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று (மே. 22) அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றிலிருந்து பால் குடம் எடுத்து ஊர்வலமாக மீனாட்சி அம்மன் கோவில் வழியாக திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி வந்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி