இடி மின்னல் மழையால் 11 வீடுகளில் டி. விகள் சேதம்.

50பார்த்தது
இடி மின்னல் மழையால் 11 வீடுகளில் டி. விகள் சேதம்.
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் நேற்று மாலையில் பெய்த மழையில் இடி, மின்னல் தாக்கியதில் 11 டிவிகள் சேதம். மற்றும் வீட்டின் மின் இணைப்புகள் பழுதடைந்துள்ளது.

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் மாடர்ன் தெரு பகுதியில் நேற்று மாலை பெய்த மழையுடன் இடி மின்னல் விழுந்தது.

இதில் மீனாட்சி நகர் மார்டன் தெரு பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 11 டிவிகள் சேதம் அடைந்தன.

மேலும் ஒரு சில வீடுகளில் இடி விழுந்ததில் விரிசல் ஏற்பட்டது. மேலும் வீடுகளில் உள்ள மின் இணைப்புகள் பாதி சரியாக வேலை செய்யவில்லை எனவும் மின் இணைப்பில் தடை ஏற்பட்டுள்ளது எனவும் கூறினர்.

நேற்று பெய்த மழையினால் இடி, மின்னல் தாக்கியதில் சேதம் அடைந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 11 டிவிகள் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி