திருமங்கலம்: மகள் மாயம்; தந்தை புகார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் இ. பி ஆபீஸ் அருகில் மீனாட்சி இல்லத்தில் வசிக்கும் தனசேகரனின் மகள் காளீஸ்வரி (18) என்பவர் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கல்லூரியில் பி. காம் (சி. ஏ) படித்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் (நவ. 7 )காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவர்கள் தந்தை தனசேகரன் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் நேற்று (நவ. 8) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.