பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி ராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம், நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.