கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவி, மகளை கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தாய் மற்றும் மகளது சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.