மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவி மின் பொறியாளர் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் நேற்று (நவ. 7) அளித்த புகார் மனுவில் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி 1600 மீட்டர் அலுமினிய வயர்கள் கப்பலூரில் உள்ள குடோனிலிருந்து வாங்கி கள்ளிக்குடி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது என்றும், ஏற்கனவே அலுவலகத்தில் 400 மீ அலுமினிய வயர் இருப்பில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி இரவு பணியில் மூர்த்தி என்பவர் இருந்தார். இவர் மறுநாள் காலை 5 மணிக்கு பார்த்த போது 2000 மீ வயர் காணாமல் போனது தெரிந்தது என மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.