திருமங்கலம்: பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு.

58பார்த்தது
திருமங்கலம்: பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் பரத பாண்டியன் நகரில் வசிக்கும் காளிமுத்து (49) என்பவர் அருகில் உள்ள சாலிசந்தைக்கு தச்சு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு அருகில், துக்க வீட்டுக்குச் சென்று திரும்பிய போது வீட்டில் இருந்த 8 பவுன் நகை, ரூ. 50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் நேற்று (அக். 30) புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி