மாநில அளவிலான கைப்பந்து போட்டி

82பார்த்தது
அழகர் கோவிலில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம் - பாரம்பரிய கலைகள் மூலம் வீரர்களை வரவேற்ற மாணவ மாணவியர்கள் ;


மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா 2023-24யை முன்னிட்டு மாநில அளவிலான மகளிர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பங்குபெறும் மாபெரும் கைப்பந்து போட்டி இன்று மாலை துவங்கியது.

முன்னதாக பங்கு பெறும் அணிகள் அனைவரையும் அழகர் கோயில் கோட்டை வாயில் முன்புறம் இருந்து
அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் தமிழ்நாட்டின் பாரம்பரிய கிராமிய கலைகளான நையாண்டி மேளம், கட்டைக்கால் ஆட்டம் மானாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், ஒயிலாட்டம் உட்பட 100க்கும் மேற்பட்டோர் விளையாட்டு அணியை பள்ளி வளாகம் வரை அணிவகுத்து வரவேற்றனர்

இதனை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த கைப்பந்து போட்டியின் முதல் நிகழ்ச்சியை திருக்கோவில் நிர்வாக அலுவலர் ராமசாமி போட்டியை துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி