மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் இன்று (நவ. 23) நடந்த கிராம சபை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேறியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தராது எனவும்,
தமிழக அரசு ஆய்வுக்குக் கூட அனுமதி வழங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியதோடு மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது எனவும் அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார். மத்திய அரசின் ஒப்புதலுடன் 2015. 51 ஹெக்டேரில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.