மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே கச்சிராயம்பட்டியை சேர்ந்த பானுப்பிரியா(22). என்பவருக்கும் ஈஸ்வரன் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணமான போது 12 பவுன் நகை, டூவீலர். ரூ. 3 லட்சம் சீர் வழங்கப்பட்டது. மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி பெண்ணை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தினர். இதனால் பானுப்பிரியா மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் நேற்று (அக். 11) அளித்தார். போலீசார் ஈஸ்வரன் (26), பெற்றோர் சொக்கலிங்கம், ஜகஜோதி உட்பட 5 பேரை மேலூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.