மேலூர் பேருந்து நிலையம் முன்பு பாஜக வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை மாலை 6 மணி அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்டும் வேட்பாளர் பேராசிரியர் ராம. சீனிவாசனை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி தினகரன் வேனில் இருந்தபடி அவரை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கையெழுத்தை போர்ஜரி என கூறியவர் தான் தற்போதைய மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் என பரப்புரையின் போது டிடிவி தினகரன் பேசினார்.