மதுரை மாவட்டம் மேலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நேற்று இரவு (ஆக., 28) உணவை தேமுதிகவினர் வழங்கினார்கள்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், மேலூர் நகர் தேமுதிக சார்பில் கழக நிறுவனர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த்தின் 72 வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டது. இதற்காக மேலூர் CSI போலியோ மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் பயிலும் - சுமார் 100 மாணவர்களுக்கு மேலூர் நகர் கழக செயலாளர் சே. சரவணன் உணவு வழங்கினார், ,
இந்நிகழ்ச்சியில் மேலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் R. விட்டி கண்ணன் , மேலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் P. காளீஸ்வரன் கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பட்டூர் சந்தன பீர் ஒலிபுல்லா, அ. வல்ளாளபட்டி பேரூர் கழக செயலாளர் P. ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் A. அபுதாஹிர், வெள்ளையன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,