போலி ஆவணங்களை சமர்ப்பித்து கிராம உதவியாளர் பணி

65பார்த்தது
மதுரை மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக இருந்த 209 கிராம உதவியாளர் பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.

பின்னர் நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் பணி செய்து வருகின்றனர். நேரடி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த தகவலையடுத்து மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டை திருப்பதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 11 தாலுக்காவில் உள்ள வட்டாச்சியர்களுக்கு நேரடி நியமன தகவல்களை கேட்டு மனுக்கள் செய்கிறார். கள்ளிக்குடி மற்றும் உசிலம்பட்டி ஆகிய 2 தாலுக்காகளிடம் மட்டுமே தகவல்கள் தரப்படுகிறது.

அதில் கள்ளிக்குடி தாலுக்கா வட்டாச்சியர் அளித்த தகவலில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர் எனும் அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை 2010 ஆம் ஆண்டிலும், தாயார் 2017 ஆம் ஆண்டிலும் இறந்தது ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

அதேபோல உசிலம்பட்டி தாலுக்கா வட்டாச்சியர் அளித்த தகவலில் ஞானசுந்தரம் எனும் ஆண் விண்ணப்பதாரருக்கு பதிலாக பெண் ஒருவர் நேர்முக தேர்வில் பங்கேற்றுள்ளார். பணியில் சேரும் போது ஞானசுந்தரம் தனது அசல் சான்றிதழ்களை ஒப்படைத்து உள்ளார்.

மீதமுள்ள 9 தாலுக்காகளில் உரிய தகவல்கள் தர வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி