மதுரை மாவட்டத்தில் பெண்கள் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் இந்த குற்றங்களில் ஈடுபட்டு வந்த திருப்பூர் ஆத்துப்பாளையம் சூர்யா 29 பதிவேற்றம் செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.