நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தமிழ்நாடு சேம்பியன்ஷிப் டி எம் கே - அழகிரி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பாக தமிழக மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 வெற்றி பெற்ற நிலையில் மதுரையைச் சேர்ந்த அழகிரியின் ஆதரவாளர் சிலர் இந்தியா 2024 டிஎன் சாம்பியன்ஷிப் டிஎம்கே என்ற பெயரில் மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளனர்
அந்த போஸ்டரில் மேன் ஆஃப் தி சீரிஸ் என்ற தலைப்பில் மு க ஸ்டாலினையும் மேன் ஆப் தி மேட்ச் என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலினையும் குறிப்பிட்டு அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது இதில் அழகிரி இருவருக்கும் நடுவில் நடந்து செல்வது போல அவர் அருகே 40க்கு 40 கோப்பை இருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த போஸ்டர் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது