மாவட்ட அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு 14 நாட்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் துளி கூட அடிப்படை வசதி இன்றி விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் கடும் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
குடிநீர் கூட தொடர்ச்சியாக வழங்காத காரணத்தினால் கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்பட்ட குடிநீரை வேறு வழியின்றி பள்ளி மாணவர்கள் குடித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க போதிய நிதி இல்லாததால் ஒரு உணவை மூன்று மாணவர்கள் பகிர்ந்து கொள்ளும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.