மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-
தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றிக்கு முதல் காரணம் முதல்வர்தான். அவரின் நலத்திட்டம், அணுகுமுறை, தமிழ்நாட்டு மக்கள் மதங்களை மதிக்கின்ற அரசு வேண்டும் என்பதற்காக, மதச்சார்பற்ற அரசு மத்தியில் வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைப் போல வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள். , எனது பகுதியை சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்திரபிரதேசத்தில் ஜனநாயகம் தன்னுடைய பாணியில் சர்வாதிகாரிக்கு எப்படி தலையில் கொட்டுமோ, அதுபோல மக்கள் நறுக்கென்று கொட்டு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.