பாதாள சாக்கடை அடைப்பை வெறும் கைகளால் அகற்றும்: பணியாளர்

66பார்த்தது
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பாதாளசாக்கடை கழிவுகளை மனிதர்களே அகற்றும் வகையில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் மனிதர்களை பயன்படுத்தும் நிலை தொடர்ந்துவருகிறது.

மதுரை மாநகராட்சி ஓபுளாபடித்துறை பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்ட நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்தும் காட்சியானது வெளியாககியுள்ளது. ஓபுளாபடித்துறை பிரதான சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது பாதாள சாக்கடை குழாய்க்குள் அமர்ந்து வெறும் கைகளால் கழிவுநீர்கள் அடைப்பை அகற்றிவருகிறார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள பாதாள சாக்கடை குழாய்களையும் எந்தவித பாதுகாப்பு உபகரணமின்றியும் கையுறை எதுவும் இன்றியும் அவர் பணியில் ஈடுபடுத்தக்கூடிய நிலை காணப்பட்டது

மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கான கையுறை மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் இது போன்று பாதாளசாக்கடை அடைப்பு பணிகளை அகற்றுவதற்கு மனிதர்களையே தொடர்ந்து பயன்படுத்தும் நிலை தொடர்ந்துவருகிறது

தமிழக அரசு மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கும், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி பணி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் மதுரை மாநகராட்சி பகுதியில் இது போன்ற நிலை தொடர்ந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி